செட்டிநாடு எனும் காரைக்குடி பகுதியில் இருந்துதான் ஏவிஎம் நிறுவனம் வந்தது. பலவிதமான செட்டிநாட்டு வீடுகளை கொண்டு அழகாக விளங்கும் செட்டிநாட்டு பகுதிகளின் தலைமயகமான காரைக்குடியை சுற்றி ஆரம்பத்தில் அவ்வளவாக படம் வந்தது கிடையாது.
இவ்வளவிற்கும் இராமநாராயணன், கண்ணதாசன், காரைக்குடி நாராயணன், கவிஞர் கண்ணதாசன், தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் உள்ளிட்டோர் காரைக்குடி பகுதிகளை சேர்ந்தவர்கள்தான்.
இன்று காரைக்குடியில் அதிகமான படங்கள் எடுக்கப்படுகிறது பிஸியாக உள்ளது. இவ்வளவு புகழ் வாய்ந்த காரைக்குடியையும் செட்டிநாட்டு வீடுகளையும் முதன் முதலில் சினிமாவில் காண்பித்தது இயக்குனர் விசுவாகத்தான் இருக்கும் அதை பற்றி அலசுவதே இந்த பதிவு