அன்னக்கிளி தொடங்கி தாரை தப்பட்டை வரை 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்த இசைஞானி இளையராஜா தனது இனிமையான இசையால் இன்றைய இளைஞர்களையும் கவர்ந்து வருகிறார்.
ஆயிரம் பேர் ஆயிரம் பாடல் போட்டாலும் அதை ட்ரெண்ட் ஆக்கினாலும் யூ டியூப்பில் பல மில்லியன் மக்கள் பார்த்திருந்தாலும் மக்கள் இன்னும் ஏங்குவது என்னவோ இளையராஜா பாடலுக்குத்தான் அந்த அளவு 70களின் இறுதியில் ஆரம்பித்த இசைஞானி ஃபீவர் கொஞ்சம் கூட விலகவில்லை.இன்றும் உதயநிதி நடிக்கும் சைக்கோ படத்துக்கு அருமையான இசையை கொடுத்துள்ளார். சிம்பொனி இசைத்துள்ளார், திருவாசகம், ரமண மஹரிசி ஆல்பம் என பல விசயங்களை கையில் எடுத்து அதை திறம்பட இசைத்து மக்களின் செவிக்கு விருந்தளித்துள்ளார் இசைஞானி.
பல சாதனைகள் புரிந்த இசைஞானிக்கு சபரிமலை கோவிலின் சார்பாக ஹரிவராசனம் விருது வழங்கப்படுகிறது. வரும் ஜனவரி 15 பொங்கலன்று இந்த விருது வழங்கப்படுகிறது.
இதற்கு முன் இந்த விருதை கேஜே ஜேசுதாஸ், பின்னணி பாடகி சித்ரா ஆகியோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது