சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்குனர் ஹலீதா ஷமீம் இயக்கியுள்ளார்.
சமுத்திரக்கனி, சுனைனா, லீனா சாம்சன், பேபி சாரா, மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
வித்தியாசமான கதைக்களத்தோடு அமைந்த இப்படத்துக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இன்று இப்படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இயக்குனர் ரஞ்சித் இப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
மிக சரியாக கோர்க்கப்பட்ட நான்கு கதைகள்! மனிதத்தின் தேவை அன்பு திரை முழுக்க கடத்தி, பார்வையாளர்களை தித்திக்க வைத்திருக்கிறது.
இந்த சில்லுக்கருப்பட்டி சுவைக்க தந்த ஹலீதா ஷமீம், சமுத்திரக்கனி, மணிகண்டன், சுனைனா குழுவினர்களுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.