ரஜினிகாந்துடன் குஷ்பு தர்மத்தின் தலைவன், அண்ணாமலை, மன்னன், பாண்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினி குஷ்பு நெருங்கிய நட்பு இருந்தாலும் குஷ்புவின் மகள் அனந்திதா ரஜினிகாந்துடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டதில்லையாம்.
சமீபத்தில் சிறுத்தை சிவா படத்தில் நடித்து வரும் குஷ்பு தனது இளைய மகள் அனந்திதா தங்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என ரஜினியிடம் அனுமதி பெற்று ரஜினியுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
சில மணி நேரங்கள் தன் மகளுக்காக செலவிட்ட ரஜினிக்கு குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.