தமிழ் சினிமாவில் பல வருடங்களாக தனது ஸ்டைலிஷ் ஆன நடிப்பாலும், வில்லத்தனமான நடிப்பாலும் அனைவரையும் மிரட்டி வருபவர் ரியாஷ்கான். அந்தக்கால அமைதியான விசு பட நடிகை கமலா காமேஷின் மருமகனும் நடிகை உமா ரியாஷின் கணவருமானவர் இவர்.
இவர் சினிமாவுக்கு நடிக்க வந்ததில் இருந்தே நல்ல உடற்கட்டுடன் உள்ளார். உடற்பயிற்சியை செய்து வருகிறார்.
இந்நிலையில் மணிரத்னம் மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை வைத்து இயக்கும் பொன்னியின் செல்வன் வரலாற்று கதையில் இவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இதற்காக கடுமையான பயிற்சிகளை செய்து வருகிறாராம் இவர்.