மோசமான கெட்ட வார்த்தை பேசிய சிபிராஜ்- சென்சார் போர்டு விழிப்புடன் உள்ளதா

அந்தக்கால சினிமா படங்கள் குடும்பத்துடன் பார்க்க கூடிய வகையில் இருந்தது 2000ங்களுக்கு பிறகு தமிழ் சினிமா விஞ்ஞான ரீதியாக வளர்ச்சியடைந்துள்ளதே தவிர அருவருக்கதக்க பாடல்கள், ஓப்பனான முத்தக்காட்சிகள் என சாதாரணமாக படமாக்கப்பட்டு வருகிறது. இது…

அந்தக்கால சினிமா படங்கள் குடும்பத்துடன் பார்க்க கூடிய வகையில் இருந்தது 2000ங்களுக்கு பிறகு தமிழ் சினிமா விஞ்ஞான ரீதியாக வளர்ச்சியடைந்துள்ளதே தவிர அருவருக்கதக்க பாடல்கள், ஓப்பனான முத்தக்காட்சிகள் என சாதாரணமாக படமாக்கப்பட்டு வருகிறது.

2577e891462bd09f158bf7b1e3a7bb85

இது ஒரு புறம் இருந்தாலும் கெட்ட வார்த்தைகளை ஓப்பனாக பேசுவது அதிகரித்துள்ளது. நடிகர் விவேக்கின் காமெடிகளில் ஏதோ கெட்ட வார்த்தை சொல்வது போல் இலைமறை காய்மறையாக சில படங்களில் காட்சி அமைத்திருப்பார். கமல் நடித்த விக்ரம் படத்தின் ஒரு காட்சியில் மோசமான ஒரு கெட்ட வார்த்தையை அவர் பேசி இருப்பார். இருப்பினும் அப்போது இவ்வளவு மீடியாக்கள் வளர்ச்சி கிடையாது, இன்றைய இண்டர்நெட் வளர்ச்சி, சமூக வலைதள பயன்பாடுகள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகியுள்ள நிலையில் சாதாரணமாக ஆண்ட்ராய்டு மொபைலை கையிலெடுத்து பார்க்கும் குழந்தைகள் இதுபோல கெட்ட வார்த்தைகளை எளிதில் பழகி விடும்.

வால்டர் படத்தின் ஒரு காட்சியில் மிகவும் மோசமான ஒரு கெட்ட வார்த்தையை சிபிராஜ் பேசியுள்ளார்.

சமூக பொறுப்புணர்வு சிபிராஜ் போன்ற நடிகர்களுக்கு கிடையாதா இப்பட இயக்குனருக்கு கிடையாதா என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சென்சார் போர்டு என்று ஒன்று இருக்கிறதா என தெரியவில்லை.

அதுவும் ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்தவர் இப்படி பேசுவது மிக ஆபத்தானது. ஏற்கனவே ஆங்காங்கே பிடிபடும் வாகன ஓட்டிகளிடம் போலீஸ் மரியாதை இல்லாமல் கெட்ட வார்த்தைகளில் பேசுவதும் அவர்கள் அதை வீடியோ எடுத்து பதிவிடுவதும் பின்பு மாவட்ட எஸ்.பி அவர்களை ஆயுதப்படைக்கு மாற்றுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இது போல பழக்கங்கள் கூடாது என காவல்துறை தலைமையும் சொல்லி வருகிறது. சில மாவட்டங்களில் காவல்துறைக்கு மன அமைதிக்காக யோகா போன்ற பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

இப்படி இருக்கையில் காவல்துறை அதிகாரி தரக்குறைவான கெட்ட வார்த்தையில் பேசுவது போல காட்சி இருப்பது ஆபத்தானது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன