உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள ’சைக்கோ’ திரைப்படம் இந்த மாதம் ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
’சைக்கோ’ திரைப்படம் ஜனவரி 24ம் தேதி ரிலீசாகும் என்று உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். உதயநிதி ஸ்டாலின், நித்யாமேனன், அதிதி ராவ் ஹைத்ரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது
தன்விர்மிர் ஒளிப்பதிவில் அருண்குமார் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஒரு திரில்லர் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ஏஞ்சல் மற்றும் மகிழ்திருமேனி இயக்கும் படமும் அடுத்த ஆண்டில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கவை. எனவே அடுத்த ஆண்டு உதயநிதியின் ரசிகர்களுக்கு 3 திரைப்படம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது