சிவகார்த்திகேயனுக்கு இன்று கிடைத்த வழக்கமான பரிசு!

சிவகார்த்திகேயன் படம் என்றாலே குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் படமாக மாறிவிட்டது எனலாம். எனவேதான் அவரது அனைத்து படங்களும் சென்சாரில் ’யூ’ சான்றிதழ் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் வரும் 20ஆம் தேதி வெளியாகும்…


4c32d1b90acdd1b42ab422d69473c740-1

சிவகார்த்திகேயன் படம் என்றாலே குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் படமாக மாறிவிட்டது எனலாம். எனவேதான் அவரது அனைத்து படங்களும் சென்சாரில் ’யூ’ சான்றிதழ் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வரும் 20ஆம் தேதி வெளியாகும் சிவகார்த்திகேயனின் ’ஹீரோ’ திரைப்படமும் தற்போது ’யூ’ சான்றிதழ் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இதனையடுத்து அவருக்கு வழக்கமான கிடைக்கும் ’யூ’ என்ற பரிசு இந்த படத்திற்கும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சென்சார் அதிகாரிகள் ’யூ’ சான்றிதழ் கொடுத்துள்ளதை அடுத்து இந்த படம் வரும் 20ஆம் தேதி வெளியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யூ சான்றிதழ் கிடைத்ததைத் புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் படக்குழுவினர் சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளனர் .

இரும்புத் திரை இயக்கனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜூன், கல்யாணி பிரியதர்ஷன், இவானா, ஷ்யாம் கிருஷ்ணன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு மேலும் ஒரு வெற்றிப்படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன