ரஜினியின் அடுத்த படத்தில் தனுஷ்: ஒரு ஆச்சரிய தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 168’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் பிரமாண்டமாக வெளிவந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை மூன்று மாதங்களில்…


2b3e52ac27614e9c14bb2e3d2c7edb7e-1

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 168’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் பிரமாண்டமாக வெளிவந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை மூன்று மாதங்களில் முடிக்க இயக்குனர் சிறுத்தை சிவா திட்டமிட்டுள்ளார். அதாவது வரும் 2020ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் இந்த படம் முடிவடைந்து விடும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் ’தலைவர் 169’ படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவர தொடங்கி விட்டன. இந்த படத்தை தயாரிக்க சிவாஜி புரோடக்சன்ஸ், ஏவிஎம் புரொடக்சன்ஸ் உள்பட 4 நிறுவனங்கள் பட்டியலில் உள்ளன. ஆனால் ரஜினி இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்திற்காக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் விரைவில் வெளிவரும் என தெரிகிறது

தனுஷ் இந்த படத்தை தயாரிக்கவிருப்பது மட்டுமின்றி இந்த படத்தில் ஒரு முக்கிய காட்சியில் நடிக்கவும் உள்ளாராம். ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கும் முன்னர் நடிக்கும் கடைசி படம் என்பதால் இந்த படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும் இந்த படம் தனுஷூக்கு 43வது படம் எது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ரஜினியின் ஒருசில படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன