தமிழ் சினிமாவின் வில்லன் நடிகர்களில் ஒருவராகிய ரியாஸ் கான் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்து உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் தாய்லாந்தில் நடைபெற்று வந்தாலும் இன்னொரு பக்கம் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது
இந்த படத்தில் ஏகப்பட்ட கேரக்டர்கள் இருப்பதால் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் இந்த படத்தில் இணைந்து விடும் என்று கருதப்படுகிறது
இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க ரியாஸ்கான் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாகவும் இவர் அடுத்த மாதம் தாய்லாந்து சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. ரியாஸ்கான் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது