ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரை கௌரவித்த அரசு! ஹரியானா அலங்கார ஊர்தியில் நீரஜ் சோப்ரா சிலை!!

By Vetri P

Published:

சில நாட்களுக்கு முன்பு ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி வீரர்களும் கலந்து கொண்டனர். டோக்கியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்கு தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தார் நீரஜ் சோப்ரா. இதற்கு முன்னதாக ஏசியன் அளவிலான போட்டிகளிலும் இந்தியாவிற்கு தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தவர்.

இவர் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவிற்கு கௌரவத்தை சேர்த்தார். இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நடக்க இருக்கின்ற குடியரசு தின அலங்கார ஊர்தியில் நீரஜ் சோப்ரா வடிவம் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் ஹரியானா மாநிலத்தின் அலங்கார ஊர்தியில் நீரஜ் சோப்ரா மாதிரி வடிவம் இடம்பெற்றுள்ளது.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவை கவுரவிக்கும் வகையில் அவரது சிலை வடிவம் அலங்கார ஊர்தி வாகனத்தில் இடம்பெற்றுள்ளது. ஹரியானா மாநில அரசின் சார்பாக அலங்கார ஊர்தியில் நீரஜ் சோப்ராவின் சிலை மாதிரி வைக்கப்பட உள்ளது.

Leave a Comment