என்னை நம்பியவர்கள் வீண்போக மாட்டார்கள்: ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற போது என் மீது நம்பிக்கை வைத்து யாரும் இதுவரை வீண்போகவில்லை என்றும் நீங்கள் வைத்த நம்பிக்கையும் வீண் போகாது என்றும் அவர்…

4188bb1fc8581a036730377ca28ea985

ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற போது என் மீது நம்பிக்கை வைத்து யாரும் இதுவரை வீண்போகவில்லை என்றும் நீங்கள் வைத்த நம்பிக்கையும் வீண் போகாது என்றும் அவர் ரசிகர்களை நோக்கி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நேற்று ஆடியோ விழாவில் அவர் பேசும்போது பெங்களூருவில் இருந்து ரயிலில் முதல்முறையாக தமிழகம் வந்த போது டிக்கெட் தொலைந்துவிட்டதாகவும் அதனால் தன்னை டிக்கெட் கலெக்டர் கலெக்டர் நம்பினார். என்றும், அவர் நம்புவதற்கு எனக்கு ஆதரவாக பேசிய ஐந்து கூலி தொழிலாளிகள் என் முகத்தைப் பார்த்து மீது நம்பிக்கை வைத்தாகவும் கூறினார்.

கூலி தொழிலாளிகள் கூறியதை நம்பி டிக்கெட் கலெக்டர் தன்னை விட்டதாகவும் நான் தமிழகத்தில் காலடி வைத்தபோது அவர்கள் என் மீது அவர்கள் நம்பிக்கை வைத்தார்கள் என்றும்,அதே போல் பாலசந்தரும் என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பு கொடுத்து, எனக்கு ரஜினிகாந்த் என்ற பெயரஒ வைத்தார் என்றும், கலைஞானம் அவர்கள் என்மீது நம்பிக்கை வைத்து என்னை ஹீரோவாக்கினார் என்றும், இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் என் மீது நம்பிக்கை வைத்து எனக்காக முதலீடு செய்தார்கள் என்றும், என் மீது நம்பிக்கை வைத்து யாரும் இதுவரை நஷ்டமடைய இல்லை அதே போல் நீங்களும் நம்பிக்கை வைத்தால் உங்கள் நம்பிக்கையும் வீண் போகாது என்று ரஜினிகாந்த் அவர்கள் பேசினார்.

தனது அரசியல் வருகையை தான் ரஜினிகாந்த் ‘நம்பிக்கை’ வைத்து பேசியதாக கூறப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன