ரஜினியின் தர்பார் புதிய திருமண பாடல்- இதுவும் காப்பியா கலாய்க்கும் நெட்டிசன்கள்

ரஜினி நடித்துள்ள தர்பார் படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது. இதில் ஆதித்ய அருணாச்சலா எனும் பெயரில் ரஜினி போலீசாக தோன்றுகிறார். சில நாட்கள் முன் ரஜினியின் ஓப்பனிங் பாடலாக நான் தாண்டா…

ரஜினி நடித்துள்ள தர்பார் படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது. இதில் ஆதித்ய அருணாச்சலா எனும் பெயரில் ரஜினி போலீசாக தோன்றுகிறார்.

8918b675de05f77c5c4e9a5b6633f8e3

சில நாட்கள் முன் ரஜினியின் ஓப்பனிங் பாடலாக நான் தாண்டா என்ற பாடல் வந்து ஹிட்டானது. இந்த பாடல் ஸ்ரீ ஹரி பாடிய கட்டும் கட்டி பாடலில் வரும் ஐயப்பன் பாடலின் உல்டா என்றும் தேவா இசையமைத்த வைகாசி பொறந்தாச்சு படத்தின் தண்ணி குடம் எடுத்து பாடலின் உல்டா என்றும் சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது அதில் ஒரு பாடலாக டும் டும் என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பாடலும் ஒரு பாடலின் காப்பி என்று விமர்சகர்களால் சொல்லப்பட்டு வருகிறது. இது இளையராஜா இசையமைத்த குத்துச்சம்பா பச்சரிசி குத்தத்தான் வேணும் என்ற அன்னக்கிளி படப்பாடலின் உல்டா என்று நெட்டிசன்கள் சொல்லி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன