இசைஞானி இளையராஜாவின் சகோதரர்களில் ஒருவரான கங்கை அமரன் சினிமாவில் பல சாதனைகளை படைத்தவர். சினிமாவில் இவர் ஒரு அஷ்டாவதானி போலத்தான்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, பாடலாசிரியர், நடிகர், என பன்முகத்தன்மை கொண்டவர் கங்கை அமரன்.
கமல்ஹாசனின் வாழ்வே மாயம் போன்ற புகழ்பெற்ற படத்திற்கு கங்கை அமரனே இசை. வந்தனம் வந்தனம்,நீலவான ஓடையில் போன்ற புகழ்பெற்ற பாடல்களை இவர் உருவாக்கி இருந்தார்.
அதுபோல் சின்னத்தம்பி பெரியதம்பி, சத்யராஜ் நடித்த ஜீவா,பிரபு நடித்த பிள்ளைக்காக, ராமராஜன் நடித்த நம்ம ஊரு நல்ல ஊரு உள்ளிட்ட பல படங்களுக்கு இவரே இசையமைத்துள்ளார். சிறப்பான பாடல்களை இந்த படங்களில் கொடுத்துள்ளார்.
அதுபோல் சிறப்பான எண்ணற்ற பாடல்களையும் கங்கை அமரன் எழுதியுள்ளார். செந்தூரப்பூவே என்ற உலகில் இல்லாத ஒரு பூவை வைத்து ஒரு அற்புதமான பாடலை 16 வயதினிலே படத்தில் எழுதி அது இன்றும் நிலைத்துள்ளது.
தர்மதுரை படத்தில் இடம்பெற்ற ஆணென்ன பெண் என்ன போன்ற தத்துவ உன்னத பாடல்களையும் கங்கை அமரன் எழுதியுள்ளார்.
எங்க ஊரு பாட்டுக்காரன், சர்க்கரை பந்தல், கரகாட்டக்காரன், ஊரு விட்டு ஊரு வந்து, சின்னவர், கோவில் காளை, வில்லுப்பாட்டுக்காரன் என பல படங்களை இயக்கி வெற்றியும் கண்டவர் இவர்.
போல கரகாட்ட கலையின் அற்புதம் சொன்ன கரகாட்டக்காரன் திரைப்படம் காலத்தால் அழியாத படங்கள் வரிசையில் இடம்பெற்று இன்றும் பேசப்படுகிறது.
இன்று அவரின் பிறந்த நாள் அவரை நம் தமிழ் மினிட்ஸ் இதழ் சார்பாக வாழ்த்துவோம்.