இசைஞானி மிக விரும்பி செல்லும் ஊர் திருவண்ணாமலை. தனது படங்கள் தவிர்த்து நிறைய இசை பக்தி ஆல்பங்களை திருவண்ணாமலை குறித்து தனது குரு ரமண மஹரிஷி குறித்தும் இசைஞானி இளையராஜா வெளியிட்டுள்ளார்.
இசைஞானிக்கு திருவண்ணாமலை செல்வதென்றால் கொள்ளை பிரியம். இங்கிருக்கும் அண்ணாமலையார் கோவிலுக்கும், ரமணாஷ்ரமத்துக்கும் பல முறை சென்று வந்திருக்கிறார்.
நாளை கார்த்திகை பவுர்ணமியை ஒட்டி இன்று அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை புரிந்த இசைஞானி இளையராஜா அண்ணாமலையாரை தரிசித்தார்.
பக்தர் ஒருவர் தான் அண்ணாமலை பற்றி எழுதிய புத்தகத்தை இசைஞானிக்கு வழங்கினார்.