சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 168’ என்ற திரைப்படத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் இந்த செய்தி தற்போது அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘தலைவர் 168’ படத்தில் கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளதாக சற்றுமுன் அறிவித்துள்ளது.
இருப்பினும் இந்த படத்தில் இவர் ரஜினியின் மகளாக நடிக்க இருப்பதாகவும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நடிகை குறித்த தகவல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக உள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு தீபாவளி அன்று திரைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது