2019 ஆம் ஆண்டு படு ஃப்ளாப்பை சந்தித்த சூர்யாவின் என்ஜிகே!!

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில்  சூர்யா நடிப்பில் வெளியான படம் என்ஜிகே. இந்தப் படம் மே 31 ஆம் தேதி வெளியானது, கோடை விடுமுறையினை ஒட்டி வெளியாக இருந்த நிலையில் பல காரணங்களால் தள்ளிப்போய் மே…

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில்  சூர்யா நடிப்பில் வெளியான படம் என்ஜிகே.

இந்தப் படம் மே 31 ஆம் தேதி வெளியானது, கோடை விடுமுறையினை ஒட்டி வெளியாக இருந்த நிலையில் பல காரணங்களால் தள்ளிப்போய் மே மாத முடிவில் வெளியானது.

மேலும் இந்தப் படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், தேவராஜ், பொன்வண்ணன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

ஆர்கானிக் விவசாயம் மற்றும் அரசியல் இரண்டையும் மையக் கதையாக கொண்டு இப்படம் உருவாகி இருந்தது.

c0c93d609e8b282b5eb188634c24b5c4

விவசாயத்தைப் பத்தி பேசியாச்சி அப்போ படம் ஹிட் ஆகும்னு எதிர்பார்த்தி இருந்த செல்வராகவனுக்கு வழக்கம்போல் கிடைத்தது தோல்விதான்.

முதல்வன் படத்தில் துவங்கி சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைபோட்ட எல்.கே.ஜி உள்பட பல படங்கள் பார்த்த அனுபவம் இந்த ஒரு படத்தினை பார்க்கும்போது கிடைத்துவிடும்.

75 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் 87.25 கோடி வசூல் செய்தது. சூர்யாவிற்காக படம் பார்க்க சென்றவர்களே அதிகம், திரைக்கதையில் படு சொதப்பல்கள்.

சூர்யா- சாய்பல்லவிக்கான காட்சிகள் பழைய படங்களின் காப்பியாக மட்டுமல்லாது, போரடிக்கும் வகையில் அமைந்துவிட்டது. ரகுல் ப்ரீத் சிங்க் என்ன நோக்கத்திற்காக படத்தில் இருந்தார் என்பதே பலருக்கு கடைசி வரை புரியல.

மொத்தத்துல 2019 ஆம் ஆண்டு வந்த முதல் படமே சூர்யாவுக்கு ஃப்ளாப் தான்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன