மிஸ்டர். லோக்கல் திரைப்படம் 2019 ஆம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படமாகும்.
இந்தத் திரைப்படம் காதல் மற்றும் நகைச்சுவை காட்சிகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.
இத்திரைப்படத்தை இயக்குநர் எம். ராஜேஷ் இயக்க சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும் மற்றும் நயன்தாரா ஹீரோயினாகவும் நடித்து இருந்தனர்.
வேலைக்காரன் படத்தில் இவர்கள் ஜோடி வரவேற்பினைப் பெற தொடர்ந்து 2 வது முறையாக இந்த ஜோடி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
இந்தப் படத்தில் யோகி பாபு, நாராயண் லக்கி, ராதிகா சரத்குமார், சதீஸ், ஆர். ஜே. பாலாஜி, தம்பி ராமையா, ரோபோ சங்கர், மனோபாலா, செளந்தரராஜா போன்றோர் நடித்து இருந்தனர்.
இந்தப் படத்தின் கதையானது ஒரு பணக்கார வீட்டு பெண்ணுக்கும், நடுத்தர குடும்பத்து பையனுக்குமான கதையாக இருந்தது. ராஜேஷ் படம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்து சென்ற ரசிகர்கள் இது மன்னன் படத்தின் 2 ஆம் பாகம் என்று கூறிவிட்டனர்.
மன்னன் படத்தினை காப்பி அடித்துள்ளதாக விமர்சனங்கள் இப்படம் படு தோல்வியை சந்தித்தது. சிவகார்த்திகேயனின் தோல்விப் பட லிஸ்டில் இதுவும் வெற்றிகரமாக இணைந்தது.