கேலியான விமர்சனங்களுக்கு உள்ளான சுந்தர்.சியின் ஆக்ஷன்!!

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான படமான ஆக்‌ஷன் இந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதி வெளியானது. இந்தப் படத்தினை ஆர். ரவீந்திரன் தனது ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின்மூலம் தயாரித்து இருந்தார்.…

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான படமான ஆக்‌ஷன் இந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதி வெளியானது.

இந்தப் படத்தினை ஆர். ரவீந்திரன் தனது ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின்மூலம் தயாரித்து இருந்தார்.

இப்படத்தில் விஷால் கதாநாயகனாகவும், தமன்னா கதாநாயகியாகவும் நடித்து இருந்தனர்.

மேலும் இப்படத்தில்  ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஆகான்ஷா பூரி மற்றும் யோகி பாபு ஆகிய பலரும் நடித்து இருந்தனர்.

விஷால் – சுந்தர் சி கூட்டணியானது ஆம்பள படத்திற்கு பின்னர் மீண்டும் இணைவது குறிப்பிடத்தக்கது.

7abe1db66e4916498448b3165add679f

இந்தப் படம் சுந்தர் சிக்கு ஒரு பெரும் தோல்விப் படமாக அமைந்தது, பலரும் இப்படத்தில் உள்ள காட்சிகள் குறித்து கிண்டலாக விமர்சித்து வந்தனர்.

எப்போதும் நகைச்சுவையினை படம் முழுக்க கொண்டு ரசிகர்களை இருக்கையிலேயே உட்காரவைக்கும் அளவிலான படத்தையே சுந்தர் சி எடுப்பார்.

ஆனால் நகைச்சுவைக்கு முழுக்கு போட்டு, முழு நீள ஆக்ஷன் படமாக எடுக்க, ரசிகர்கள் பலரும் ஏமாந்து போயினர்.

வசூல் ரீதியாக ஹிட் படங்களை கொடுக்கும் சுந்தர் சிக்கு இப்படம் தோல்விப் படமாக அமைந்துவிட்டது. ஜிப் பறப்பது, பறந்து பறந்து சண்டையிடுவது போன்ற காட்சிகள் டூ மச் என்னும் அளவு இப்படத்தில் இருந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன