ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா படம் இயக்க சன் பிக்சர்ஸ் அந்த படத்தை தயாரிப்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. இன்று அந்த படத்தின் பூஜை தொடங்கியது.
இதில் ரஜினி, மீனா, குஷ்பு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த படத்தில் புதிய வரவாக நகைச்சுவை நடிகர் சதீஷும் இணைகிறார்.
முன்னதாக இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரியும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை மகிழ்ச்சியான செய்தியாக வெளிப்படுத்தியுள்ளார் சதிஷ். தலைவர் பிறந்த நாளில் தனக்கு கிடைத்த பரிசு எனவும் அவர் கூறியுள்ளார்.