மீனா சிறு குழந்தையாக நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் படமே அவருக்கு திரையுலகில் திருப்புமுனையாக அமைந்தது.அதில் குழந்தை நட்சத்திரமாக ரஜினி அங்கிள் நீங்க எங்க இருக்கிங்க என கத்திக்கொண்டே முத்து மணி சுடரே வா என்ற பாடல் பெரிய அளவில் பேசப்பட்டது.
அதன் பிறகு மீனா பெரிய பெண் ஆனதும் ரஜினிகாந்துடன் எஜமான் படத்தில் முதன் முதலில் சேர்ந்து நடித்தார். இது அந்த நேரத்தில் விமர்சனத்துக்குள்ளானது. ரஜினியுடன் குழந்தையாக நடித்த மீனா அவருடனே சேர்ந்து நடிப்பதா என்ற விமர்சனங்கள் எழுந்தது.
இருப்பினும் விமர்சனங்கள் எல்லாம் புறந்தள்ளப்பட்டு படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து வீரா, முத்து என ரஜினி காம்போவுடன் மீனா நடித்த படங்கள் எல்லாம் மெகா ஹிட் . வீரா மட்டும் சுமார் படம் என்றாலும் இந்த காம்போ பேசப்பட்டது.
அதுபோல் தமிழ்சினிமாவில் குஷ்பு முதன் முதலில் அறிமுகமானதே தேவர் பிலிம்ஸ் தயாரித்த ரஜினி நடித்த தர்மத்தின் தலைவன் படத்தில்தான். இருப்பினும் அதில் அவருக்கு ஜோடி பிரபுதான்.
பின்பு பி வாசு இயக்கத்தில் வந்த மன்னன், அண்ணாமலை, பாண்டியன் உள்ளிட்ட ரஜினி படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் இந்த ஜோடியும் பேசப்பட்டது.
இப்போது சினிமாவில் அடுத்த ரவுண்ட் ஆக 25 வருடத்துக்கு பிறகு இரு மாஜி ஹீரோயின்களும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வரும் தலைவர் 168 என்று இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகின்றனர்.
என்ன கதாபாத்திரம் என தெரியவில்லை. குஷ்பு, மீனாவுக்கு அக்கா , அம்மா கதாபாத்திரம் கொடுக்காமல் இருந்தால் சரி என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த படத்தில் நடிப்பதில் பெரு மகிழ்ச்சியில் குஷ்புவும், மீனாவும் உள்ளது இந்த புகைப்படங்களை வைத்தே அறிய முடிகிறது.