பழைய சவுத் ஆப்பிரிக்கா அணி ரிட்டன்ஸா? இந்திய பந்துவீச்சாளர்களை பறக்க விட்ட பேட்ஸ்மேன்கள்! இந்தியாவுக்கு இமாலய இலக்கு!!

By Vetri P

Published:

கிரிக்கெட் உலகின் தலை சிறந்த அணியாக நம் இந்திய அணி. தொடர்ந்து காணப்பட்டு வருகிறது. இந்திய அணி எந்த ஊருக்கு விளையாட சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும் அங்கு தனது காலை பதித்துக் கொண்டே வரும்.

ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. ஏனென்றால் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரில் இந்தியா படுதோல்வி அடைந்தது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா தோற்றது.

தற்போது இந்திய அணியின் அனைத்து தரப்பு விளையாட்டு போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகியுள்ளார். இதனால் தோல்விக்கு கணக்கு கட்டும் வகையில் மீதமுள்ள ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தென்னாபிரிக்காவுடனான தொடரை வெல்லுமா? என முனைப்போடு காணப்படுகிறது.

இன்றைய தினம் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த முதல் டெஸ்ட் போட்டியில் சவுத் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.

50 ஓவர் முடிவில் சவுத்ஆப்பிரிக்கா அணி 296 ரன்கள் எடுத்து வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து உள்ளது. இதனால் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரையும் சவுத்ஆப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேன்கள் பறக்க விட்டனர் என்பது இன்றைய போட்டியை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

அதுவும் குறிப்பாக van der dussen பேட்டிங்கை இந்திய பந்துவீச்சாளர்கள் சமாளிக்க முடியவில்லை. இதனால் அவர் களத்தில் நின்ற படி 129 ரன்களை எடுத்துள்ளார்.

அதோடு சவுத்ஆப்பிரிக்கா அணியின் கேப்டனும் 110 ரன்களை எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் இத்தகைய இமாலய இலக்கை சந்திக்க கதிகலங்கி நிற்கின்றனர். இந்த போட்டியில் தலைமை தாங்கி வழி நடத்துகிறார் கே எல் ராகுல்.

Leave a Comment