இயக்குனர் மிஷ்கின் தற்போது சைக்கோ கதையை படமாக்கி முடித்துள்ளார். உதயநிதி நடித்திருக்கும் இப்படத்தின் ஒரு பாடல் மட்டும் வந்து ஹிட் ஆகியுள்ளது.
இதற்கு அடுத்ததாக விஷாலை வைத்து தான் ஏற்கனவே இயக்கிய துப்பறிவாளன் படத்தின் தொடர்ச்சியாக அதே விஷாலை வைத்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வருகிறார். இதற்கும் தனக்கு மிகவும் பிடித்தமான இசைஞானி இளையராஜாவே இசையமைக்க வைத்திருக்கிறார் மிஷ்கின்.
இப்படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்புகள் லண்டனில் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படம்தான் இது.
ரகுமான், கெளதமி உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.