சரவணா ஸ்டோர் அருள் நடிக்கும் புதிய படம்: ஹீரோயின் யார்?

பிரபல தொழிலதிபர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜையில் பழம்பெரும் இயக்குநர் எஸ்பி முத்துராமன், பழம்பெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மற்றும் நடிகர்…

930abd367416ecf97694d3cdf12bb413-1

பிரபல தொழிலதிபர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜையில் பழம்பெரும் இயக்குநர் எஸ்பி முத்துராமன், பழம்பெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மற்றும் நடிகர் பிரபு, விவேக், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை உள்பட பலர் கலந்து கொண்டனர்

ரூபாய் 100 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகவுள்ள இந்த படத்தை இயக்குனர் ஜேடி ஜெர்ரி இயக்க உள்ளார். இவர் அஜித், விக்ரம் இணைந்து நடித்த ’உல்லாசம்’ என்ற படத்தையும் ’விசில்’ என்ற படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

f922f7c372523e64cee3603dd53829e7

பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஜாலியான திரைப்படமாக இந்த படத்தை உருவாக்க ஜேடி ஜெர்ரி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் அருள் ஜோடியாக நடிக்க ஒரு முன்னணி நடிகையை ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும், இது குறித்த தகவல்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன