பிரபலமான சீரியல் நடிகை நித்யா ராம். அழகிய தோற்றம் கொண்ட இவருக்கு ரசிகர் ரசிகைகள் அதிகம்.
மொட்டு மனசே’ என்ற கன்னடப் படத்தின் மூலமாகத் திரையுலகுக்கு வந்தவர் நித்யா ராம். அதன் பிறகு திரையுலகில் சரியான வாய்ப்புகள் இவருக்கு கிடைக்காததால் சீரியல்கள் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார்.
சுந்தர் சி இயக்கி சன் டிவியில் வெளியான நந்தினி சீரியலில் நடித்ததன் மூலம் அனைவரையும் கவர்ந்தார் இவர்.
சில டிவி ஷோக்களிலும் பங்கேற்ற இவருக்கும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதமுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவிலேயே செட்டிலாக திட்டமிட்டுள்ளாராம் இவர்.