பிரபல நடிகை ரம்யா நம்பீசன் இவர் தமிழில் ராமன் தேடிய சீதை, சேதுபதி, சத்யா, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் சிறந்த பாடகி என்பதும் பலருக்கு தெரிந்த விசயம்தான். தமிழில் புகழ்பெற்ற ஃபை ஃபை கலாய்ச்சி ஃபை போன்ற பாண்டிய நாடு படத்தின் ஹிட் பாடலை எல்லாம் இவர் பாடியுள்ளார்.
இவர் புதிதாக பாடியுள்ள ஆல்பம் இவரது யூ டியூப் சேனலில் இன்று மாலை 5 மணியளவில் வெளியாகிறது. யூ டியூப் சேனலும் மாலைதான் லாஞ்ச் செய்யப்படுகிறது. இந்த பாடலைத்தான் அவரது தோழி யும் நடிகையுமான பாவனா நேற்று பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்கோர் என பெயரிடப்பட்டுள்ள இந்த சேனல் மற்றும் பாடல் தொகுப்பை மாலை 5 மணியளவில் எதிர்பாருங்கள்.
இது இவரின் சொந்த யூ டியூப் சேனல் ஆகும்