ரஜினிக்கு கை கொடுத்த சந்திரபோஸ்

எண்பதுகளில் ரஜினி பிஸியான நடிகர் சூப்பர் ஸ்டார் என்பதால் இவரது படத்துக்கு அன்று இன்று என்றும் ஒரே மாதிரி ரசிகர்களே இருந்தார்கள். இவருக்கு 80களில் வந்த படங்களுக்கு அதிகப்படியாக இசையமைத்தது இசைஞானி இளையராஜாதான். இவருக்கு…

எண்பதுகளில் ரஜினி பிஸியான நடிகர் சூப்பர் ஸ்டார் என்பதால் இவரது படத்துக்கு அன்று இன்று என்றும் ஒரே மாதிரி ரசிகர்களே இருந்தார்கள்.

7da08932c1eef9a9a485caf3bc67a674-1

இவருக்கு 80களில் வந்த படங்களுக்கு அதிகப்படியாக இசையமைத்தது இசைஞானி இளையராஜாதான். இவருக்கு பல மாஸான க்ளாஸான இசையை இசைஞானி கொடுத்தார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

சில நேரங்களில் இளையராஜாவால் ரஜினியின் படத்தில் சரியான நேரத்தில் கமிட் ஆக முடியாமல் போய்விடும் சில சொந்த காரணங்களால் இயக்குனர் தயாரிப்பு நிறுவனங்களுடன் உள்ள பிரச்சினையாலும் ரஜினியின் படங்களுக்கு இளையராஜா இசையமைக்கவில்லை என்றால் அந்த இடத்தை நிரப்பியது சந்திரபோஸ்.

அவரும் சும்மா இல்லை பல கலக்கல் ஹிட்டை ரஜினிக்கு கொடுத்திருக்கிறார்.

ரஜினி நடித்த விடுதலை படத்தில் சந்திரபோஸ் இசையில் பாடல்கள் எல்லாம் ஹிட். நாட்டுக்குள்ள நம்ம பத்தி கேட்ட பாருங்க, நீலக்குயில்கள் ரெண்டு உள்ளிட்ட பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரஜினிக்கு ஹிட் ஆனது. அதுபோல் ரஜினி நடிப்பில் ஏவிஎம் தயாரிப்பில் வந்த மனிதன் படம் ரஜினிக்கு பெயர் சொன்ன படம்.

வைரமுத்துவின் வரிகளில் சந்திரபோஸ் இசைத்த மனிதன் மனிதன் இவன் தான் மனிதன் பெரிய அளவில் ஹிட் ஆன டைட்டில் பாடல். மேலும் காளை காளை முரட்டுக்காளை, ஏதோ நடக்கிறது போன்ற பல ஹிட் பாடல்கள் இந்த படத்தில் உண்டு.

அதுபோல் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த ராஜா சின்ன ரோஜா படத்துக்கும் சந்திரபோஸ் இசை. இதில் வந்த பாடல்களும் ஹிட் . பண்பாடு இல்லை என்றால் பாரதம் இல்லை, பூ பூ போல் மனசிருக்கு, சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை ரஜினிக்காக மாஸ் ஹிட் ஆகும் அளவு போட்டுக்கொடுத்தவர் சந்திரபோஸ்.

ரஜினிக்கு சிறப்பான இசையை கொடுத்ததில் இளையராஜா, தேவா, ரஹ்மான் போல சந்திரபோசுக்கும் முக்கிய இடமுண்டு

ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான அங்கீகாரமான இசையமைப்பாளராக சந்திரபோஸ் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏவிஎம் நிறுவனத்தின் சீரியல்களுக்கும் சந்திரபோஸே இசையாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன