கொரோனாத் தொற்று மூன்று அலைகளாக படையெடுத்துள்ள நிலையில் நாடு ஒமிக்ரான், புளோரோனா எனப் பல வகையான வைரஸ் தொற்றிற்கு ஆளாகி வருகின்றது.
கொரோனா வைரஸ் தொற்றிற்கு எதிராக தடுப்பூசிகள் போடும் பணியானது உலகம் முழுவதிலும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் தற்போது இங்கிலாந்தில் கடந்த வாரம் முதல் கொரோனா பாதிப்பு விறுவிறுவென்டு அதிகரித்து வருகின்றது, இதனையொட்டி கொரோனாவைக் கட்டுக்குள் வைக்க எண்ணி இங்கிலாந்து சுகாதாரத் துறை அதிரடி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது.
அந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் 16 மற்றும் 17 வயது சிறுவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி போடும் பணி துவக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவின்படி இன்று ஜனவரி 17 ஆம் தேதி துவங்கி கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை துவக்கி வைத்துள்ளது.
2 வது தவணை தடுப்பூசி செலுத்தி 3 மாதங்கள் முடிந்ததும் 16 மற்றும் 17 வயது சிறுவர்கள் பூஸ்டர் தவணை தடுப்பூசியை செலுத்தி கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி திட்டம் அமலுக்கு வந்த முதல் நாளே சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.