முன்னாள் அமைச்சர் ஆர்.எம் வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த ரஜினி படங்களில் இரண்டு படங்கள் மிகப்பெரிய மாஸ் படங்கள் ஒன்று பாட்ஷா, இன்னொன்று மூன்று முகம் திரைப்படம்.
இரண்டு படங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இரண்டு படங்களிலும் ப்ளாஷ் பேக் சீன்களே பலமாக இருந்தது என்பதுதான்.
அதிலும் மறைந்த இயக்குனர் ஜெகநாதன் இயக்கிய மூன்று முகம் படம் மிகப்பெரும் மாஸ் படம். படத்தின் மற்ற காட்சிகள் சுமார்தான். படத்தில் சில நிமிடமே வரும் ப்ளாஷ்பேக் ரஜினிதான் கலக்கி இருந்தார்.
வில்லன் செந்தாமரையும் ரஜினியும் போலீஸ் ஸ்டேசனில் பேசிக்கொள்ளும் காட்சிகள் பரபரப்பின் உச்சமாகும்.
இந்த காட்சிகள் அந்நாளில் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வர வைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
“இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்கு முன்னால யாராவது சந்தேகப்படும்படி நின்னா, அவனை தூக்கி உள்ள போடுங்க” என இவர் பேசிய வசனத்தை ரஜினி ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது.
ரஜினி நடித்த டி.எஸ்.பி அலெக்ஸ் பாண்டியன் என்ற கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் நீடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என ரஜினி ரசிகர்கள் நினைக்கும் அளவு அந்த கதாபாத்திரம் வலுவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.