சூரியை கைவிட்டு சூர்யாவுக்கு கைகொடுத்த வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வெற்றிமாறனின் அடுத்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் ஒரு நாவலை அடிப்படையாக…

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வெற்றிமாறனின் அடுத்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் ஒரு நாவலை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் உருவாக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கூட ஆரம்பிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்ட நிலையில் திடீரென இந்த படம் டிராப் செய்யப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வெற்றிமாறனின் அடுத்த படத்தில் நடிக்க சூர்யா சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் எனவே சூர்யாவின் படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் 15 நாட்களில் தொடங்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

179b2a9885ca8acd70c1a457d5972cba

சூர்யாவின் படத்தை முடித்த பின்னரே அவர் சூரியின் படத்தை இயக்க இருப்பதாகவும் அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சூர்யா-வெற்றிமாறன் இணையும் அதிரடி ஆக்சன் படத்தை முன்னணி நிறுவனம் ஒன்று பெரும் பட்ஜெட்டில் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்தை 3 மாதத்தில் முடிக்க சூர்யா நிபந்தனை விதித்த நிலையில் அந்த நிபந்தனைக்கு வெற்றிமாறன் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது

வெற்றிமாறன் ஒரு திரைப்படத்தை குறைந்தது இரண்டு ஆண்டுகள் எடுக்கும் நிலையில் மூன்றே மாதத்தில் அவர் எப்படி முடிப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன