இயக்குனர் ஏ.எல் விஜய் மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமாக இருந்த ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தலைவி என்ற பெயரில் படம் இயக்கி வருகிறார்.
அவரின் ஆரம்ப கால கதையில் இருந்து சினிமாவில் நடித்தது முதற்கொண்டு அனைத்து வரலாற்றையும் படமாக்கி உள்ளனர்.
இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இந்த பர்ஸ்ட் லுக் டீசர் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
சிலர் நன்றாக உள்ளது என்றும் சிலர் ஜெ போலவே இல்லை என்றும் இந்த போஸ்டரை விமர்சித்து வருகின்றனர்.