நோ எஞ்ஜாய்மெண்ட்.. இசைக்கருவியை நெருப்பு வைத்து கொளுத்திய தாலிபான்கள்!

By Gayathri A

Published:

ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை பல ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்கா விடுவித்த சில மாதங்களிலேயே கடுமையான கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைமுறைக்கு வந்தது. தாலிபான்கள் பொதுமக்கள் கலாச்சாரம் சார்ந்த விஷயங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை புகுத்தி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு பல தலைமுறைகளாக வசித்து வந்த மக்கள் பல நாடுகளுக்கும் தஞ்சம் புகுந்தனர். அந்தக் கட்டுப்பாடுகளில் ஒன்று பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் கட்டுப்பாடுகள் கொண்டுவருதல்.

பொழுதுபோக்கின் ஒரு அம்சமாக இசையினை ஒலிப்பது மட்டுமின்றி கேட்கவும் தடை விதிக்கப்பட்டது.

இதனை மீறி யாரேனும் இசை கேட்டாலோ அல்லது இசைக் கருவி வாசித்தாலோ அவர்களுக்கு ஜெயில் தண்டனை போன்றவையும் விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஒருவரின் இசைக்கருவியினை நெருப்பு வைத்து கொளுத்தி உள்ளனர்.

இசையமையாளர் இசைக்கருவி எரிவதைக் கண்டு குமுறி அழ, தாலிபான்கள் இசைக் கருவி எரிக்கப்படுவதைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்து மகிழ்கின்றனர்.

இசைக் கருவியினை நெருப்பு வைத்துக் கொளுத்துவதை பொதுமக்களும், பத்திரிக்கையாளர்களும் சூழ்ந்து நின்று பார்ப்பதுபோல் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

சமூக வலைதளத்தில் வெளியான இந்த  வீடியோவை ஆப்கானிஸ்தானை சேர்ந்த பத்திரிகையாளரான அப்துல்லா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

Leave a Comment