சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் சென்று தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் கடந்த வருடம் சபரிமலையே, போராட்டம், புரட்சி என ரணகளமானது எல்லாவற்றையும் மீறி கனகதுர்கா என்ற பெண் பக்தர்களை தாண்டி தரிசனம் செய்யவும் சென்று விட்டார்.
இப்படி பிரச்சினைகள் சென்று கொண்டிருக்க இந்த வருடம் கேரள அரசு பெண்கள் யாரும் வர வேண்டாம் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என கூறிவிட்டது.கோர்ட் ஆர்டர் கொண்டுவந்தால் பாதுகாப்பு அளிக்கப்படும் என கூறிவிட்டது
இந்த நிலையில் அதையும் மீறி புறப்பட்ட பிந்து என்ற பெண் மீது கொச்சியில் இன்று மிளகாய் பொடி கலந்த ஸ்பிரே அடிக்கப்பட்டது.
மேலும் ஒரு பெண்ணும் சபரிமலை செல்ல முயன்று, கொச்சி காவல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
திருப்தி தேசாய் என்ற பெண் கடந்த வருடம் சபரிமலை செல்ல முயன்ற பிரச்சினையில் முக்கியமானவர் அதே திருப்தி தேசாய்தான் இந்த வருடமும் இந்த பெண்களை அழைத்து சென்ற நபர் என்பது குறிப்பிடத்தக்கது.