கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 27.11.1987ம் ஆண்டு வெளியான படம் பேசும் படம். இப்படம் படத்தின் தலைப்பிற்கேற்ப மக்களால் இன்று வரை பேசும் படமாக உள்ளது சிறப்பு.
கமல் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை எடுக்க கூடியவர் அப்படிப்பட்ட கமல் பல வருடங்கள் பின்னோக்கி சென்றார் முதன் முதலில் ஊமைப்படங்களாக வந்த காலத்துக்கு கமல் சென்றதுதான் வினோதம். ஆம் கமல் நடிப்பில் உருவான இந்த படத்துக்கு இளையராஜா இசை மட்டுமே பிரதானமாக இருந்தது.
படத்தில் வசனம் எதுவும் இல்லை பேச்சு இல்லை ஒன்லி மியூசிக் என்ற வகையில் வித்தியாசமானதொரு படமாக இப்படம் வந்து இருந்தது. காமெடிப்படமான இது ஹிந்தியில் புஷ்பக் என்று வந்திருந்தது.
கமல் நடித்த இப்படத்தை சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கி இருந்தார். அமலா ஜோடியாக நடித்து இருந்தார்.இப்படம் வெளிவந்து இன்றோடு 32 ஆண்டுகள் ஆகி விட்டனவாம்.
படத்தின் விளம்பரங்களில் கேட்டு ரசிக்க கூடிய படமல்ல பார்த்து ரசிக்க கூடிய படம் என்று கேப்ஷன் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.