மகேஷ்பாபு நடித்த நந்து, மதுரைக்கு வரப்போறேன் உள்ளிட்ட படங்கள் டப் செய்யப்பட்டு தமிழில் வெளியிடப்பட்டுள்ளன. பக்காவான ஆக்சன் படமான இந்த படங்களை காட்டிலும் ஏ.ஆர் முருகதாஸ் மகேஷ்பாபுவை வைத்து நேரடி படமான ஸ்பைடர் எனும் ஆக்சன் படத்தையும் இயக்கி விட்டார்.
தெலுங்கில் மிக முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் இவரின் பல ஆக்சன் படங்கள் தமிழில் விஜய் நடிக்க கில்லி, போக்கிரி என ரீமேக் செய்யப்பட்டு ஹிட் அடித்தது.
இப்போது இவர் புதிதாக நடித்து வரும் சரிலேரு நீக்கெவரு என்ற படத்தை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வத்தில் உள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இதில் விஜயசாந்தி நடித்துள்ளார்.
அனல் பறக்கும் சண்டைக்காட்சிகள் உள்ள இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது இப்போதைக்கு டீசர் வெளியாகியுள்ளது. கடந்த 22ல் டீசர் வெளியானது.
படம் வெற்றிபெற்றால் தமிழில் இப்படத்தை ரீமேக் செய்யவும் வாய்ப்புண்டு.