கமல்ஹாசன் சமீபத்தில் அவரின் பிறந்த நாளை கொண்டாடினார். அத்தோடு திரையுலகில் அவரது 60வது ஆண்டு விழாவையும் கொண்டாடினார்.
இது முடிந்த உடனேயே அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவு செய்தார். கடந்த 2016ல் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் அவரது காலில் கம்பி பிளேட் வைத்து பொருத்தப்பட்டது.
அதை சில வருடங்களில் எடுக்க வேண்டும் என்பதால் அதை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டது
இந்த சிகிச்சைகள் அனைத்தும் முடிந்த நிலையில் கமல்ஹாசன் வீடு திரும்பினார் .அவரை சுகாசினியின் அம்மா, சுகாசினி உள்ளிட்டோர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.