மெரினா 27 சவால் ஏன் நடக்கவில்லை- காயத்ரி ரகுராம்

சில நாட்களுக்கு முன் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் புதுச்சேரி கூட்டத்தில் பேசும்போது, கோவில் சிலைகளில் அசிங்கம் ஆபாசம் உள்ளது என பேசியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது குறித்து கருத்து…

சில நாட்களுக்கு முன் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் புதுச்சேரி கூட்டத்தில் பேசும்போது, கோவில் சிலைகளில் அசிங்கம் ஆபாசம் உள்ளது என பேசியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

cc9cb7ef5db00e2eb43cfcc505bc96e9

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த நடிகை காயத்ரி ரகுராம். திருமாவளவனை செருப்பால் அடிக்க சொன்னார். இது பயங்கர கோபத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு ஏற்படுத்தியதால் அவர் வீட்டு முன் போராட்டம் நடத்தினர்.

திருமாவளவன் தைரியம் இருந்தால் மெரினாவில் 27ம் தேதி என்னை நேரில் சந்திக்கட்டும் என சவால் விடுத்து இருந்த நிலையில் அடுத்தடுத்த நடந்த குழப்பங்கள் பிரச்சினைகளால் இந்த சந்திப்பு நடக்குமா என நினைக்கப்பட்டது.

இந்நிலையில் காயத்ரியின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், நேற்று நடக்க இருந்த சந்திப்பு குறித்து காயத்ரி பேஸ்புக்கில் கருத்து கூறியுள்ளார்.

இன்றைய தினம் மெரினாவில் சந்திப்பு தொடர்பாக காத்திருந்தேன். இந்த நிமிடம் வரை திருமாவிடம் இருந்து பதில் இல்லை. விசிக தொண்டர்களை ஏமாற்றும்படி ஆகி விட்டது.

இனி எந்த ஒரு தலைவரும் ஜாதி மதம் சார்ந்த பாகுபாடுகளை பார்க்க மாட்டார்கள். நீங்கள் அனைவரும்உங்களின் வழக்கமான பணிகளை தொடரவும் என கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன