தனுஷ் கல்லூரியில் படிக்கும்போது அந்த கல்லூரிக்கு ஷூட்டிங் எடுக்க ஒரு படக்குழுவினர் வருகின்றனர். அந்த படத்தின் ஹீரோயினாக நடித்து வரும் மேகா ஆகாஷ் விருப்பம் இல்லாமல் நடித்து வரும் நிலையில், அவரை அந்த படத்தின் இயக்குநர் ஒருதலையாக காதலித்து வருகிறார்.
இந்த நிலையில் கல்லூரியில் தற்செயலாக தனுஷ்-மேகாஆகாஷ் சந்திப்பு நடக்க இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. ஆனால் இந்த காதல் தெரிந்து இயக்குனர் மேகா ஆகாஷை மிரட்டி அழைத்துச் சென்றுவிடுகிறார். இதன் பின்னர் சில வருடங்கள் கழித்து திடீரென தனுசுக்கு மேகா ஆகாஷ் போன் செய்கிறார். அந்த போனில் ஒரு திடுக்கிடும் தகவல் இருக்க உடனடியாக அந்த தகவலை அறிந்து மேகாஆகாஷ் நோக்கி கிளம்புகிறார் தனுஷ். அந்த தகவல் என்ன? மேகா ஆகாஷூக்கு என்ன ஆச்சு? அதன் பின் ஏற்பட்ட திருப்பங்கள் என்ன? என்பதே இந்த படத்தின் மீதி கதை.
தனுஷ் எந்த ஒரு கேரக்டரில் நடித்தாலும் அந்த கேரக்டராகவே மாறி விடுவார் என்பது தெரிந்ததே. முதல் பாதி முழுக்க முழுக்க ரொமான்ஸ் காட்சிகளிலும் இரண்டாம் பாதி அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் தனுஷ் அசத்துகிறார்
மேகாஆகாஷ் அழகான ஒரு நாயகியாக படத்தில் வருகிறார். முதல் பாதியில் அவருடைய ரொமான்ஸ் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகாக இருக்கிறது. இரண்டாம் பாதியிலும் அவருடைய நடிப்பு சூப்பர் என்று தான் சொல்லவேண்டும்
படத்தின் மிகப்பெரிய மைனஸ் ஆக வாய்ஸ் ஓவர் என்பதை என்று கூறலாம். படத்தில் உள்ள கேரக்டர்கள் பேசுவதை விட பின்னணி குரல் அதிக நேரம் பேசுவது ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பை தருகிறது. கௌதம் மேனனின் திரைக்கதை வழக்கம்போல் அவரது ஸ்டைலிஷாக இருக்கிறது. கதையை நேரடியாக சொல்லாமல் சில காட்சிகள் மூலம் புரியவைக்கும் அவருடைய பாணி கொஞ்சம் புத்திசாலி சினிமா ரசிகர்களுக்கு புரியும். சசிகுமாரை ஒரு சில நிமிடங்கள் மட்டும் பயன்படுத்தினாலும் சரியாக பயன்படுத்தி உள்ளார் என்றே கூறலாம்
படத்தின் அழகான கேமரா மற்றும் கச்சிதமான எடிட்டிங், தர்புகா சிவா வின் அபாரமான பின்னணி இசை, கேட்க கேட்க தூண்டும் பாடல்கள், குறிப்பாக மறுவார்த்தை பேசாதே என்ற பாடல் ஆகியவை படத்தின் ப்ளஸ் பாயிண்டுகள்
மொத்தத்தில் கௌதம்மேனன்-தனுஷ் கூட்டணியில் ஒரு அழகான காதல் ஆக்ஷன் படம் உருவாகி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது
ரேட்டிங்: 3/5