கருவாயனின் உண்மை வரலாற்றை வைத்து விஜயகாந்த் நடித்த கரிமேடு கருவாயன் திரைப்படம்- இன்றும் நினைவு சின்னங்களாய் காட்சி தரும் கருவாயன் வாழ்ந்த இடங்கள்

By Abiram A

Published:

மதுரை கரிமேடு பகுதியில் வாழ்ந்தவர் கருவாயன் என்பவர் இவர் மிகப்பெரும் போராளியாக போலீசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.

இவரின் கதையை மையமாக வைத்து கடந்த 1986ல் வெளிவந்த திரைப்படம் கரிமேடு கருவாயன்.

இந்த திரைப்படத்தில் கருவாயனாக விஜயகாந்த் நடித்திருந்தார். மேலும் நளினி, சத்யராஜ்  போன்றோரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

உண்மைக்கதை என சொல்லப்பட்டாலும் இப்படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது . படமும் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது.

இப்படம் மதுரை சோழவந்தான் பகுதியில் படமாக்கப்பட்டது இப்பகுதியில்தான் கருவாயன் நீண்ட நாள் இருந்திருக்கிறார்.

இவர் பெரும்பாலும் கவட்டை எனும் உண்டி வில்லைத்தான் ஆயுதமாக பயன்படுத்துவாராம் குறிபார்த்து அடிப்பதில் சூரர் என்று சொல்லப்படுகிறது.

நல்ல விசயத்துக்காக பல குற்றங்கள் செய்த கருவாயனை போலீசார் பிடிக்க முடியாமல் போராடி சோழவந்தானில் உள்ள  பழைய கீரைத்தோட்டம் அருகில் பாலன் தியேட்டரில் பிடித்ததாகவும், பிறகு போலீசார் அங்கேயே சுட்டு கொன்றதாகவும் கூறப்படுகிறது.

அவர் இருந்து வந்த தென்னந்தோப்பு, கிணறு ஆகியன இன்றும் இங்குள்ள  தென்கரை (கருவாயன் தோப்பு) மற்றும் RC பள்ளி பகுதியில் இருக்கின்றனவாம்.

விஜயகாந்த் நடித்த கரிமேடு கருவாயன் படத்தில் படத்தின் கதையை பாடல் வடிவிலேயே ஆரம்பத்திலேயே இளையராஜா சொல்லி இருப்பார்.

karimedu karuvayan 1

இராமநாரயாணன் இயக்கி இளையராஜா இசையமைத்த கரிமேடு கருவாயன்  உண்மை வரலாற்றை சங்கிலி முருகன் தயாரித்திருந்தார். ஏனென்றால் சங்கிலி முருகன் சோழவந்தான் அருகேயுள்ள பொதும்பு என்ற கிராமத்தை சேர்ந்தவர் அவர்கள் ஊர் போராளியின் வரலாற்றை அறிந்து கொள்ளும் நோக்கில் இந்த படத்தை சங்கிலி முருகன் தனது மீனாட்சி ஆர்ட்ஸ் சார்பாக இப்படத்தை தயாரித்திருந்தார். படமும் வெற்றி பெற்றது.

இன்றும் சோழவந்தான் பகுதிக்கு சென்றால் கரிமேடு கருவாயன் வாழ்ந்த இடங்களை காணலாம் என சொல்லப்படுகிறது.

Leave a Comment