காமெடி நடிகரும் தொகுப்பாளருமான ஆர்.ஜே பாலாஜி ஏற்கனவே கதாநாயகனாக நடித்த எல்.கே.ஜி படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்போது சிறு இடைவேளைக்கு பிறகு மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கி இவர் நடித்து வருகிறார்.
வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இப்படம் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் என்பதில் மாற்றமில்லை. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன் தாரா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி வேலன் தயாரிக்கிறார் இப்படம் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளிவருமாம்
இப்படத்திற்கான லொக்கேஷன்கள் பார்க்கும் பணியில் இயக்குனர் நடிகர் ஆர் ஜே பாலாஜி ஈடுபட்டு வருகிறார்.
இப்படத்தை பாலாஜியுடன் சேர்ந்து என்.ஜே சரவணன் என்பவரும் சேர்ந்து இயக்குகிறார்.