‘சங்கத்தமிழன்’ பிரச்சனை சால்வ் ஆனது எப்படி?

ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்று, அட்வான்ஸ் பணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை அளித்துவிட்டு, ரிலீசுக்கு முந்தைய நாள் திடீரென பணம் புரட்ட முடியாத காரணத்தால் கோலிவுட்டில் பல திரைப்படங்கள் முடங்கியுள்ளது. அந்த வகையில்…

7157e30a14f73b53ba8c7c3cd021b123

ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்று, அட்வான்ஸ் பணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை அளித்துவிட்டு, ரிலீசுக்கு முந்தைய நாள் திடீரென பணம் புரட்ட முடியாத காரணத்தால் கோலிவுட்டில் பல திரைப்படங்கள் முடங்கியுள்ளது. அந்த வகையில் விஜய் சேதுபதி நடித்த ’சங்கத்தமிழன்’ திரைப்படமும் சேர்ந்துவிடுமோ என்ற அச்சம் நேற்று காலை வரை இருந்தது.

ஆனால் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையால் இந்த படம் நேற்றிரவு முதல் ரிலீஸ் ஆகியுள்ளது

‘சங்கத்தமிழன்’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லிப்ரா புரடொக்சன்ஸ் என்ற பெரிய நிறுவனம் ரூபாய் 8 கோடிக்கு பெற்று அதற்காக ரூபாய் மூன்று கோடி அட்வான்ஸ் பணமும் கொடுத்துள்ளது. ரிலீசுக்கு ஒருசில மணி நேரத்தில் மீதி ஐந்து கோடியை புரட்ட முடியாததால் ரிலீசுக்கு பின்னர் பணத்தை தருவதாக கூறியதால் ரிலீசில் சிக்கல் ஏற்பட்டது

இதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு குறிப்பிட்ட தொகையை ரிலீசுக்கு பின்னர் வாங்கிக்கொள்ள விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனம் சம்மதித்ததாகவும், அதன்பின்னரே நேற்று இந்த படம் ரிலீஸ் ஆனதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன