ஒமிக்ரானைத் தொடர்ந்து புளோரோனா.. வாரந்தோறும் வைரஸா? மக்கள் பீதி!

By Gayathri A

Published:

கொரோனா என்னும் வைரஸ் தொற்று சீனாவில் 2019 ஆம் ஆண்டு உருவாகியது, அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளுக்கு போர் எடுத்தது.

தற்போது 2019, 2020, 2021 என மூன்று ஆண்டுகள் முடிந்த நிலையில் இரண்டு கொரோனா அலைகளைக் கடந்து மூன்றாவது அலைக்குள் கால் எடுத்து வைக்கிறோம்.

வைரஸ்களும் கொரோனாவில் இருந்து ஒவ்வொன்றாக உருமாறி தற்போது ஒமிக்ரான் என்ற வைரஸாக உருவெடுத்துள்ளது.

ஒமிக்ரான் தொற்று உருவான சில நாட்களிலேயே பல நாடுகளுக்குப் படையெடுத்துவிட்டது. வைரஸோடு வாழப் பழகிய மக்களுக்கு அடுத்து என்ன வைரஸ் வரவிருக்கிறதோ என்ற அச்சமும் ஒருபுறம் மேலோங்குகின்றது.

இந்தநிலையில் ஒமிக்ரானுடன் நாம் வாழப் பழகும் முன்னர் புளோரோனா என்ற வைரஸ் உருவாகியுள்ளது.

புளோரோனா வைரஸ் முதன் முதலாக இஸ்ரேலில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு செய்த சோதனையில் தெரிய வந்தது.

இஸ்ரேலைத் தொடர்ந்து தற்போது மெக்சிகோவின் நையாரிட் மற்றும் செலிஸ்கோ மாகாணங்களில் இரு நபருக்கு புளோரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியானது மக்கள் மத்தியில் பீதியினை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment