பாபநாசம் படத்தை இயக்கியவர் ஜீது ஜோசப். இவர் இயக்கத்தில் வந்த பாபநாசம் திரைப்படம் நீண்ட வருடம் கழித்து கமலஹாசன் நடிப்பில் ஒரு கமர்சியல் படமாக வந்து வெற்றி பெற்றது.
அதன் பிறகு தமிழில் சில வருடங்களாக படம் செய்யாமல் இருந்த ஜீது ஜோசப், கார்த்தி, ஜோதிகாவை வைத்து இயக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் மூலம் மீண்டும் தமிழ் திரைக்கு வந்துள்ளார்.
தம்பி என்று மாதவன் படம் சில வருடங்களுக்கு முன் தான் வந்தது அதை எடுத்து இப்படத்துக்கு வைத்து விட்டார்கள். தமிழ் சினிமாவில் கற்பனை வறட்சி அதிகம் வந்து விட்டது என நினைக்க வேண்டியுள்ளது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. கிறிஸ்துமஸை ஒட்டி படம் வரும் என எதிர்பார்க்கலாம்.