மிகப்பெரிய அய்யப்ப பக்தி படங்களின் இயக்குனர் இவர் கமல்ஹாசனின் நண்பர் என்பது கூடுதல் தகவல். கமலின் களத்தூர் கண்ணம்மாவிலும் இவர் நடித்துள்ளாராம். தமிழில் அதிக அய்யப்ப பக்தி படங்களை இயக்கியது இவர்தான்.
இப்போ அய்யப்ப பக்தி படங்கள் அவ்வளவாக வருவது கிடையாது முன்பு வந்த பல அய்யப்ப பக்திப்படங்களை இயக்கியது இவர்தான் பெயர் தசரதன் இவர் இயக்கிய படங்களில் குறிப்பிடத்தக்கது 80ல் வெளிவந்த சரணம் அய்யப்பா திரைப்படம் அய்யப்ப சாமிகள் காலம் கலிகாலம் ஆகி கொண்டிருக்கும் இப்போது மட்டுமல்ல 1980களில் கூட ஒழுக்கம் இல்லாமல்தான் இருந்திருக்கிறார்கள் அதை அப்போதே இந்த படத்தில்தோலுரித்து காட்டியவர். சந்திரபோஸ் இசையில் பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் பாடல் ஜேசுதாஸ் பாடியது இந்த சரணம் அய்யப்பா படத்தில் இடம்பெற்று புகழ்பெற்றது.இவரின் படங்களில்தான் அய்யப்பன் கோவிலையும் செல்லும் பெருவழி சிறுவழி பாதையையும் நன்றாக காண்பித்திருப்பார்.
இப்போது எல்லாம் அய்யப்பன் கோவிலை இந்த அளவிற்க்கு
படம் பிடிப்பது மிகவும் கடினம்.குடும்ப உறவுகளையும் அய்யப்ப பக்தியையும் கலந்து இவர் இயக்கிய அருள்தரும் அய்யப்பன் திரைப்படம் வெற்றிப்படம்.இவரின் அய்யப்ப பக்திபடங்களில் கமலஹாசன் உட்பட தமிழின் அப்போதைய முன்னணி நட்சத்திரங்கள்பலர் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார்கள்.என்பது குறிப்பிடத்தக்கது.இவரின் படங்களில் அதிக சினிமா முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படம் எங்கள் சாமி அய்யப்பன் ஏகப்பட்ட சிறு சிறு கதைகளுடன் இவரே கதை சொல்வது போல் அமைந்திருக்கும் பார்த்திபன் ,கார்த்திக் உட்பட பலர் நடித்திருப்பார்கள் அய்யப்ப பக்தி படங்களில் இந்த படம் சற்று கூடுதல் சுவாரஸ்யத்துடன் ஏகப்பட்ட கதைகள் சொல்லப்பட்டிருக்கும் இவர் இயக்கிய படங்களில் எல்லாம் இவர் காமெடி ரோலில்தான் நடித்திருப்பார்.
சில வருடங்கள் முன் இவர் மறைந்து விட்டார்.