மறைந்த வில்லன் நடிகர் எம்.என் நம்பியார் இவரின் நூற்றாண்டு விழா நாளை கொண்டாடப்படுகிறது. சினிமாவில் வில்லன் குணச்சித்திரவேடங்களில் நடித்தது மட்டுமல்லாது சிறந்த அய்யப்ப பக்தராகவும் பலருக்கும் வழிகாட்டிய அய்யப்ப குருசாமியாக சிறந்த ஆன்மிகவாதியாக திகழ்ந்த எம். என் நம்பியார் ஐயப்பனுக்கு உகந்த மாதமான கார்த்திகை மாதத்திலேயே இறைவன் திருப்பாதத்தை தழுவினார்.
அவர் மறைந்து 11 ஆண்டுகள் ஆன நிலையில் நாளை 19ம் தேதி அவரின் மறைவு தினமாகும். அதை ஒட்டி அவரின் நூற்றாண்டு விழா நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இசைஞானி இளையராஜா, காவல் துறை உயரதிகாரி விஜயகுமார் ஐபிஎஸ் அவர்களும் கலந்து கொள்கின்றனர்.
சென்னை மியூசிக் அகாடமியில் இவ்விழா நடக்கிறது.