கமல் திரைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதை ஒட்டி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் பல திரைக்கலைஞர்களும் கலந்து கொண்ட நிலையில் நடிகர் விஜய்யின் அப்பாவும் சினிமா இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் கலந்து கொண்டார்.
இதில் ரஜினியும் கமலும் இணைந்து நல்லாட்சி தர முயற்சி செய்ய வேண்டும் என கூறியுள்ளார். ரஜினிகாந்த் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை . அப்படி ஆரம்பித்தால் இருவரும் கூட்டணி சேர்ந்து நிற்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
எஸ்.ஏ சியின் ஆசையை இருவரும் நிறைவேற்றுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.