நல்லவேளை! தப்பித்துக் கொண்டார் விஜய், மாட்டிக் கொண்ட விஜய்சேதுபதி

By Staff

Published:

விஜய் சேதுபதி நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த ’சங்கத்தமிழன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கு பெரும்பாலான ஊடகங்கள் கலவையான விமர்சனத்தை கொடுத்த நிலையில் ரசிகர்களை இந்த படம் திருப்தி படுத்த வில்லை என்றே தெரிகிறது

சுமாரான திரைக்கதை, ஏற்கனவே பல படங்களில் பார்த்த காட்சிகள் இருப்பதாக படம் பார்த்தவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் ஒரு பேட்டியில் இயக்குனர் விஜய்சந்தர், இந்த படம் குறித்து கூறிய போது ’இந்தத் திரைப்படத்தை தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்காக எழுதியதாகவும் அதை அப்படியே தமிழில் விஜய்யை வைத்து இயக்கும் திட்டம் இருந்ததாகவும் ஆனால் திடீரென இந்த படத்தில் விஜய் சேதுபதி கமிட் ஆனதால் அவருக்கு ஏற்றவாறு சில காட்சிகளை தான் மாற்றியதாகவும் கூறினார்.

இந்த நிலையில் சங்கத்தமிழன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததை ‘விஜய் நல்லவேளையாக தப்பித்தார் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். விஜய்க்கு பதிலாக விஜய் சேதுபதி இந்த படத்தில் பரிதாபமாக மாட்டிக்கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்

Leave a Comment