இசைஞானி இளையராஜாவை சைக்கோ படத்தில் ஒப்பந்தம் செய்தவர் மிஷ்கின். உதயநிதி இதுவரை நடித்த படங்கள் சில படங்கள் கதைக்கு ஸ்கோப் உள்ள படங்களில் நடித்திருந்தாலும் சில பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்திருந்தாலும் சில வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும் அவரின் நடிப்பு இன்னும் பெரிய அளவில் பேசப்பட்டு இன்னும் ஒரு படம் கூட வரவில்லை.
இந்த நிலையில் தீவிர அரசியல்வாதியாக செயல்பட்டு வரும் உதயநிதி திமுக இளைஞரணி தலைவராகவும் உள்ளார். என்னதான் இருந்தாலும் கட்சிக்காரர்கள் தங்களது தலைவர் யாராக இருந்தாலும் தனி நபர் துதி பாடுவதை வழக்கமாக கொண்டிருப்பர்.
அந்த வகையில் ஒரு திமுக உபி, உதயநிதி தற்போதுள்ள புதிய ரக இசையமைப்பாளர்களுடன் அவர்களது நிழலில் தான் வளர நினைக்காமல் ரிடையர்ட் ஆன இசையமைப்பாளருடன் பணியாற்றும் உதயநிதியின் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன் என கூறியுள்ளார்.
இதை பார்த்த இளையராஜாவின் வெறி பிடித்த தீவிர ரசிகர்கள் சிலர் உதயநிதியை வாழ்த்திய உடன் பிறப்பின் தவறான கருத்தை சமூக வலைதளத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இளையராஜாவின் இசையமைப்பில் நடிப்பதுதான் உதயநிதிக்கு பெருமை. உதயநிதி படத்துக்கு இசைத்தது ராஜாவுக்கு பெருமையல்ல என டுவிட் இட்டு வருகின்றனர்.