விஜய் நடித்துவரும் 64ஆவது திரைப்படமான ’தளபதி 64’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் கல்லூரி காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வரும் நிலையில், வரும் டிசம்பர் முதல் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் விஜய்சேதுபதி கேரக்டரும் அந்த கேரக்டருக்கான வசனங்களை தளபதி விஜய் படித்து பார்த்ததாகவும், தன்னுடைய கேரக்டரை விட அந்த கேரக்டர் மாஸ் ஆக இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தார் என்றும் கூறப்படுகிறது
பொதுவாக ஒரு ஹீரோ தன்னுடைய கேரக்டரை விட வில்லன் கேரக்டருக்கு மாஸ் அதிகம் இருந்தால் அதனை குறைக்கும்படி வலியுறுத்துவார்கள். ஆனால் தளபதி விஜய் அது போன்று எதுவும் கூறாமல் பெருந்தன்மையுடன் இதே மாஸ் காட்சிகள் இருக்கட்டும் என்று அனுமதி அளித்தாராம். அதுமட்டுமின்றி இந்த கேரக்டருக்கு இன்னும் கொஞ்சம் மாஸ் ஏற்றினால் நன்றாக இருக்கும், முடிந்தால் அதை செய்யுங்கள் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் விஜய் வேண்டுகோளும் விடுத்தார்
இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக மட்டுமின்றி கல்லூரி மாணவராகவும் ஒரு சில காட்சிகளில் நடிப்பதாகவும், அவர் மாணவராக நடிக்கும் காட்சி பிளாஷ்பேக்கில் வர இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. நண்பன் படத்திற்கு பின்னர் கல்லூரி மாணவராக விஜய் நடிக்கும் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது