கமல்ஹாசனுக்கு ஒடிசாவின் செஞ்சுரியன் பல்கழைக்கழகம் சார்பில் கெளரவ டாக்டர் வழங்கப்பட்டது இதில் கலந்து கொள்வதற்காக புவனேஷ்வர் சென்ற கமல்ஹாசன் அங்கு பல விழாக்களில் கலந்து கொண்டார்.
ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்கையும் சந்தித்து பேசினார். கமல்ஹாசனை புவனேஸ்வர் போலீஸ் கமிசனர் சுதான்சு சாரங்கி வரவேற்று பாராட்டியுள்ளார்.
கமல்ஹாசனின் பலவகையான நடிப்பை நான் எப்போதும் பாராட்டியிருக்கிறேன்,கமல் நடித்த புஷ்பக் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்தது. கமல், பணிவு நிறைந்த மிகவும் ஈர்க்கக்கூடிய ஆளுமை, என்று கூறியுள்ளார்